உள்ளூர் செய்திகள்

இரு தரப்பினர் மோதல்: 9 பேர் கைது

Published On 2023-09-25 16:54 IST   |   Update On 2023-09-25 16:54:00 IST
  • ஒசூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் போலீசார் கைது செய்தனர்.
  • முன் விரோதம் காரணமாக மோதல்

ஓசூர் சென்ன சந்திரத்தைச் சேரந்தவர் முருகேசன் (வயது 27). கூரியர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி முருகேசன் தரப்பினரும், நாகேஷ் தரப்பினரும் விநாயகர் சிலையை கரைத்து விட்டு வந்த போது ஏற்பட்ட பிரச்சினையில், முருகேசன், பிரகாஷ் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

இதில் காயம் அடைந்த முருகேசன் இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஓசூர் சென்னசந்திரம் வ.உ.சி. நகரை சேர்ந்த சூர்யா (25), கிரண்குமார்(27) , காளியப்பன் (29), நாராயணன் (48) ஆகிய 4 பேரை கைது செயதனர். மேலும் நாகேஷ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல சூர்யா கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் போலீசார் சிவா (31), சிவராஜ் (28), கஜேந்திரன் (31), தேவராஜ் (30), சிவா (32), ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News