உள்ளூர் செய்திகள்
செங்கல்பட்டுக்கு மகளிர் கல்லூரி வேண்டும்- வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. சட்டசபையில் வலியுறுத்தல்
- செங்கல்பட்டில் 1,500 மாணவர்கள் சேர்க்கைக்கு 10 விண்ணப்பங்கள் வருகிறது.
- வேதாச்சலம் கல்லூரிக்கு எம்.எஸ்.சி. போன்ற கூடுதல் பாடப்பிரிவுகள் வேண்டும்.
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் பேசுகையில், "செங்கல்பட்டில் 1,500 மாணவர்கள் சேர்க்கைக்கு 10 விண்ணப்பங்கள் வருகிறது. எனவே அங்கு கூடுதலாக மகளிர் கலைக் கல்லூரி வேண்டும். அங்குள்ள வேதாச்சலம் கல்லூரிக்கு எம்.எஸ்.சி. போன்ற கூடுதல் பாடப்பிரிவுகள் வேண்டும்" என்றார்.
அதற்கு அமைச்சர் பொன்முடி பதில் அளிக்கையில், "எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும், தங்களது தொகுதிக்கு கலைக்கல்லூரி வேண்டும் என்று கூறுகிறார்கள். நிதிநிலைக்கு ஏற்ப கல்லூரி அமைத்து கொடுக்கப்படும். கூடுதல் பாடப்பிரிவுகள் வேண்டுமென்று எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். அது செய்து கொடுக்கப்படும்" என்றார்.