உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை மையங்களில் 250 டன் இயற்கை உரம் தயார்

Published On 2023-08-23 09:02 GMT   |   Update On 2023-08-23 09:02 GMT
  • 45 நாட்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கின்றனர்
  • மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

வேலூர்:

வேலுார் மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் காட்பாடி, சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் உள்ள 52 திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு அனுப்பப்படுகிறது.

அங்கு மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை தரம்பிரித்து, அதில் ஈரப்பதம் இருக்கக்கூடிய பொருட்களை கொண்டு, 45 நாட்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கின்றனர்.

இந்த மையங்களில், மாதத்திற்கு 25 முதல் 30 டன் வரை இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை நுண்ணுயிர் உரம், விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:-

திடக்கழிவு மேலாண்மை நிலையங்களில் கிட்டத்தட்ட 250 டன் இயற்கை உரம் தயார் நிலையில் உள்ளது. இப்போது வீட்டு தோட்டங்களில் செடிகள் வளர்க்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நேரில் வந்து உரத்தை இலவசமாக பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News