உள்ளூர் செய்திகள்
நாய் கடித்து இறந்த ஆட்டுடன் வந்து போலீஸ் நிலையத்தில் விவசாயி புகார்
- உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்
- சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
குடியாத்தம்;
குடியாத்தம் அடுத்த மோடிக்குப்பம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு.
இவர் தனது விவசாய நிலத்தில் 5 ஆடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை,பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவர் வளர்த்து வரும் நாய் கொடூரமாக கடித்தது. இதனால் ஆடு பலியானது.
இதையடுத்து ஆத்திரமடைந்த ரகு இறந்த ஆட்டுடன் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு ரகுவுக்கு சொந்தமான மற்றொரு ஆட்டை நாய் கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.
நாய் கடித்து இறந்து போன ஆட்டுடன் விவசாயி போலீஸ் நிலையத்தில் புகாரளிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.