தமிழக அதிகாரியுடன் ஆந்திர வனத்துறையினர் வாக்குவாதம்
- வாகனம் மோதி இறந்த சிறுத்தை தீயிட்டு எரிக்கப்பட்டது
- சிறுத்தை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது
வேலூர்:
பேரணாம்பட்டு அருகே ஆந்திர வனப்ப குதிக்குட்பட்ட சாலையில் இறந்து கிடந்த குட்டி பெண் சிறுத்தையின் உடலை ஆந்திர மாநிலம் பலமநேர் வனத்துறையினர், கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது தமிழக எல்லையில் இறந்து கிடந்த சிறுத் தையை கொண்டு வந்து ஆந்திர மாநில எல்லையில் போட்டு விட் டீர்கள் எனக்கூறி பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமாரிடம் ஆந்திர மாநில வனத்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த சித்தூர் மாவட்ட வன அலுவலர் சைதன்ய குமார் ரெட்டி சிறுத்தை இறந்து கிடந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
பின்னர் அவரது முன்னிலையில் ஆந்திர மாநில கால்நடை மருத்துவ குழுவினர் அதே இடத்தில் நேற்று மாலை சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சிறுத்தையின் உடல் பாதுகாப்பாக தீயிட்டு எரிக்கப்பட்டது.
பலமநேர் வனச்சரகர் சிவண்ணா, உதவி வனச்சரகர் வேணுகோ பால் ரெட்டி, பேரணா ம்பட்டு வனச்சரகர் சதீஷ்கு மார், வனவர் இளையராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.