71 அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு தேர்தல்
- மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்த பயிற்சி அளிக்க வேண்டும்
- பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்திலுள்ள 8 ஒன்றியங்களில் 13 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 71 அரசுமேல் நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கான தேர்தல் நடைப்பெற்றது.
மேலாண்மை குழுவானது மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காகவும் . மாணவர்களின் ஒழுக்கத்தை சிறப்பான முறையில் கடைபிடிப்பதற்காகவும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேப்படுத்தவும் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டது.
ஆசிரியர்கள் . மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்த சிறப்பான முறையில் பயிற்சி அளிக்க வேண்டும் . மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் விளையாட்டு பயிற்சியும் அளிக்க வேண்டும்.
கழிவறை வசதி , காற்றோட்டமான வகுப்பறைகள் சுற்றுப்புறசு நூய்மை , மரம் வளர்ப்பது மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் . பெற்றோர்கள் மாணவர்களினுடைய கல்வி நலனை கருத்தில் கொண்டு மாதம் ஒருமுறை அந்தந்த வகுப்பு ஆசிரியர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும்.
நமது வேலூரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையை சிறப்பான தேர்ச்சி விகிதங்களை தந்து வேலூரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக கொண்டு வர வேண்டும் என்று பெற்றோராளையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டு பெற்றோர்களின் குறைகளை கேட்டறிந்து பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார். மேலும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் துணை தலைவரிகளுக்கான நியான உத்தரவுகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி. உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.