உள்ளூர் செய்திகள்
வேலூரில் ஐ.சி.பி.எல். கிரிக்கெட் போட்டி
- மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜி.வி.சம்பத் தொடங்கி வைத்தார்
- கள்ளக்குறிச்சி சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது
வேலூர்:
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் கட்டிட பொறியாளர்களுக்கான புரோ லீக் ( ஐ.சி.பி.எல்.)என்ற கிரிக்கெட் போட்டி தொடர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வேலூர் சி.எம்.சி. மைதானத்தில் 2 நாட்கள் நடத்தப்பட்டது. போட்டிகளை வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜி.வி.சம்பத் தொடங்கி வைத்தார். இதில் 6 அணிகள் கலந்து கொண்டன.
கள்ளக்குறிச்சி சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் ரீஜியன் 5 அணியை வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதில் கட்டிட பொறியாளர்கள் அமைப்பு நிர்வாகிகள், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தைச் சேர்ந்த சி.புகழேந்தி, நாகசுந்தரம், ஜி.சரவணமூர்த்தி, எம்.டி.பாலச்சந்தர், ஜெ.சிவசக்தி, பி முரளிதரன். ஏ.கோகுல தாஸ், ஆர்.சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.