உள்ளூர் செய்திகள்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனை

Published On 2023-02-13 10:05 GMT   |   Update On 2023-02-13 10:05 GMT
  • விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்
  • ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடிக்க தீவிரம்

அணைக்கட்டு:

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.

நேற்று நடந்த ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தால் வேலூர் மாவட்டம் வழியாக கொள்ளையர்கள் கர்நாடக, ஆந்திர மாநிலத்திற்கு எளிதாக சென்று விடும் நிலை உள்ளதால், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தர வின்பேரில், பள்ளி கொண்டா காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடியாத்தம் சாலை அதேபோல் வேலூரில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையிலும் போலீசார் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி பகுதியில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், முருகன் மற்றும் போலீசார் அவ்வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News