வேலூர் மாவட்டத்தில் புதிதாக மாடு விடும் விழா நடத்த அனுமதி இல்லை
- கலெக்டர் அறிவிப்பு
- கிராமங்களின் பெயர்களை அரசாணை மூலம் வெளியிட நடவடிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு எருது விடும் விழாக்கள் நடத்தியவர்களுக்கு மட்டும் இந்தாண்டு அனுமதி வழங்கப்படும் என்றும், புதிதாக விழா நடத்துபவர்கள் யாருக்கும் அனுமதி யில்லை என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கி மாவட்ட நிர்வாகம் அனுமதித்த கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
விழா நடத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டு விதிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை இரண்டு கட்டங்களாக எருது விடும் விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது மூன்றாம் கட்டமாக 42 கிராமங்களில் விழாக்கள் நடத்த அதற்கான தேதிகள் இறுதி செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்ப ட்டுள்ளது. விரைவில் இவற்றுக்கான அரசாணை வெளியிடப்பட வுள்ளன.
இந்நிலையில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-
வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் நடத்த அனுமதி கோரிய கிராமங்களின் பெயர்களை அரசாணை மூலம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கான நடவடிக்கையில் கால்நடை பராமரிப்புத் துறை ஈடுபட்டது. அதில், கடந்த ஆண்டுகளில் அரசால் அறிவிப்பு செய்யப்பட்ட கிராமங்களுக்கு மட்டுமே தற்போது விழா நடத்த அரசாணை வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு அரசாணையில் இல்லாத கிராமங்களில் இந்தாண்டு விழா நடத்த அரசாணை வெளியிட முடியாது என திருப்பி அனுப்பியுள்ளனர்.
எனவே, கடந்த ஆண்டு விழா நடத்த அரசாணை பெறாத கிராமங்களில் இந்த ஆண்டு விழா நடத்த அனுமதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களை அரசுக்கு பரிந்துரை செய்ய முடியாது. எனவே, புதிதாக விழா நடத்த யாரும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டாம்.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் எருது விடும் விழா நிகழ்ச்சிகளில் பெரும்பாலான கிரா மங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
அரசு வழிகாட்டு நெறிமுறைகளை விழாக்கு ழுவினர் முறையாக கடைபிடித்து எருது விடும் விழாவை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.