உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான குறளரசன்.

செம்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலர் மகன் விபத்தில் பலி

Published On 2023-05-16 12:23 IST   |   Update On 2023-05-16 12:23:00 IST
  • கிராம நிர்வாக அலுவலர் மகன் விபத்தில் பரிதாபமாக பலியானார்.
  • போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த, பழைய ஆயக்குடியைச் சேர்ந்தவர்கள் ராஜலிங்கம் -லீலாவதி தம்பதியினர். ராஜலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டார். லீலாவதி சிவகிரிபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு தமிழரசன் (25) குறளரசன் (23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் தமிழரசன் விவசாயம் செய்து வருகிறார். இளைய மகன் குறளரசன் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி., படித்து வருகிறார். இந்நிலையில் செம்பட்டி வழியாக பழனி அடுத்த பழைய ஆயக்குடிக்கு குறளரசன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது செம்பட்டி பழனி சாலை, ராமநாதபுரம் அருகே சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருந்ததால், அனைத்து வாகனங்களும் ஒரு சாலையில் திருப்பி விடப்பட்டது. ஒரு வழி சாலையில் செல்லும்போது திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் குறளரசன் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் குறளரசன் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலே பலியானார். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற செம்பட்டி சப்-இன்ஸ்பெ க்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசார், குறள ரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் திருப்பூரிலிருந்து கார் ஓட்டி வந்த டிரைவர் சதீஷ்குமார் (44) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.ஏ.எஸ்., அகாடமியில் படித்த மாணவன் செம்பட்டி அருகே கார் மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News