உள்ளூர் செய்திகள்

சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்டுள்ள பல விதமான விநாயகர் சிலைகள்.

நிலக்கோட்டை ஒன்றியத்தில் 120 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

Published On 2023-09-17 10:48 IST   |   Update On 2023-09-17 10:48:00 IST
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இரவு நிலக்கோட்டை ஒன்றியத்தில் 115 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்த பின்னர் நாளை சதுர்த்திவிழா கொண்டாடப்படும்.
  • 32 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா 5 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து நடத்தப்பட்டு அணைப்பட்டியில் சிலைகள் கரைக்கப்படும்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை பகுதியில் இந்து முன்னணி சார்பாக நிலக்கோட்டை, கொடை ரோடு, விளாம்பட்டி, அணைப்பட்டி, அம்மையநாயக்கனூர், சிலுக்குவார் பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஊர்வலம் தொடங்கப்பட்டு விநாயகர் சிலைகள் நிலக்கோட்டை நால்ரோடு வந்து அடையும். அங்கு இந்து முன்னணி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெறும். இந்த ஊர்வலத்தில் மொத்தம் 115 சிலைகள் கலந்து கொள்வதாக இந்து முன்னணி மதுரை கோட்ட பொறுப்பாளர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இரவு நிலக்கோட்டை ஒன்றியத்தில் 115 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்த பின்னர் நாளை சதுர்த்திவிழா கொண்டாடப்படும். அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி 115 கிராமங்களிலும் காலை முதல் ஊர்வலம் கிளம்பி நிலக்கோட்டை நால்ரோடு வந்தடைந்து

அங்கு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு பின்னர் அணைப்பட்டி வைகை ஆற்றில் பிள்ளையார் சிலைகள் கரைக்கப்படும் என தெரிவித்தார். இதை போன்று தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிசத் மற்றும் ஆன்மீக சேவா சங்கம் சார்பாக சிலுக்குவார் பட்டி, கரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதற்காக சிலைகளை தயார் செய்து வருகின்றனர்.

இது குறித்து விஸ்வ ஹிந்து பரிசத் மாவட்டச் செயலாளர் ராஜாராம் கூறியதாவது:- நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார் பட்டி யில் தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் , மற்றும் ஆன்மீக சேவா சங்கமம் இணைந்து 32 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா 5 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து நடத்தப்பட்டு அணைப்பட்டியில் சிலைகள் கரைக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News