உள்ளூர் செய்திகள்

எம்.ஐ.எஸ்.அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-10-01 08:18 GMT   |   Update On 2023-10-01 08:18 GMT
  • எம்.ஐ.எஸ்.அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • 6-ந் தேதிக்குள் பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் எம்.ஐ.எஸ். அனாலிஸ்ட் ஒரு பணியிடத்திற்கு வெளிப்பணி மூலம் நிரப்பப்பட உள்ளது.

இதற்கு 30 வயதிற்குட்பட்ட மற்றும் 3 ஆண்டுகள் கணிணி இயக்கவியலில் முன் அனுபவமுள்ள, தகுதி வாய்ந்த பி.இ., (கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்), பி.டெக்., (கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம்) எம்.சி.ஏ., (கணிப்பொறி அறிவியல்), எம்.எஸ்.சி., (கணிப்பொறி அறிவியல் அல்லது தகவல் தொழில் நுட்பத்தில் சிறப்பினம்) பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர் அஞ்சல்-626 002, விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ வருகிற 6-ந் தேதிக்குள் பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News