உள்ளூர் செய்திகள்
- ரூ.1 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- அனுமதியின்றி தயாரித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
சிவகாசி தெய்வானை நகர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டுவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்குள்ள பட்டாசு கடையின் பின்புறம் உள்ள இடத்தில் ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் பட்டாசுகள் இருந்தன. மொத்தம் 60 பெட்டிகளில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை அனுமதியின்றி தயாரித்து வைத்திருந்த விஜயகுமார் என்பவரை கைது செய்தனர்.
மேலும் அந்த பட்டாசுகளை தயாரிக்க ஆர்டர் கொடுத்த சித்துராஜபுரம் பால்பாண்டி, சாமிபுரம் காலனி விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.