உள்ளூர் செய்திகள்
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்ணை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
- நிலாபாரதி மீட்கப்பட்டு அவரிடம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விருதுநகர்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கீழபட்டியை சேர்ந்தவர் தர்மர். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிலா பாரதி (22). இவர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற நிலா பாரதியை குன்னூர் பகுதியை சேர்ந்த முத்துபாண்டி (33) என்பவர் கடத்தி சென்று விட்டார். அவர் நிலாபாரதியை துன்புறுத்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த தர்மர் கிருஷ்ணன் கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துபாண்டியை பிடித்து கைது செய்தனர். நிலாபாரதி மீட்கப்பட்டு அவரிடம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.