உள்ளூர் செய்திகள்

சிவன் கோவிலில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு

Published On 2022-08-01 09:01 GMT   |   Update On 2022-08-01 09:01 GMT
  • சிவன் கோவிலில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினார்கள்.
  • இன்னும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் பல உண்மைகள் தெரிய வரும் எனவும் தெரிவித்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம்- திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள பறவை அன்னம் காத்தருளியசாமி கோவிலில் வரலாற்றுக் கள ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினார்கள்.

ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளது கிபி 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் 12-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

தற்போது உள்ள பறவை அன்னம் காத்தருளிய சுவாமி விக்ரகம் ஏற்கனவே உள்ள ஒரு பாழடைந்த மண்டபத்தில் இருந்ததாகவும் தற்போது பாதுகாப்பு காரணம் கருதி அந்த மண்டபத்திலிருந்து வேறொரு மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கன்னிமூல திசையில் இருந்த கணபதி தற்போது சிவன் உள்ள கருவறையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் முருகன் சந்நிதியும் இதர சன்னதிகளும் பாழடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன. இந்த சன்னதிகளை தொல்பொருள் ஆராய்ச்சி துறை சார்பில் ஆய்வு செய்து உரிய ஏற்பாடுகள் செய்தால் பல உண்மைகள் தெரியவரும் எனவும் வரலாற்று கள ஆராய்ச்சியா ளர்கள் தெரிவிக்கின்றனர்.

வரலாற்று கள ஆராய்ச்சி யாளர் சார்பில் வெங்கடேஷ், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர்கள் காளி, பழனி குரு உள்பட பலர் இதில் கலந்துகொண்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்னும் ஆராய்ச்சி களை மேற்கொண்டால் பல உண்மைகள் தெரிய வரும் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News