ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா மாணவி தேர்வு
- விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
- பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி கவின் கிருஷிகா தேர்வானார். இதனால் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ராக்கெட் தொழில்நுட்பங்கள் பார்வையிட இஸ்ரோ நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இதற்காக இளம் விஞ்ஞானி திட்டம் அமல்படுத்தியது. இது இஸ்ரோ நிதி உதவியுடன் பள்ளி மாணவர்களின் கல்விக்கான பயிற்சி திட்டம் ஆகும். இதற்கான தேர்வு ஆன்லைனில் ஸ்பேஸ் க்விஸ் என்ற தேர்வு நடத்தப்பட்டது.
இதில் சத்யா வித்யாலயா பள்ளி மாணவி எஸ்.ஆர். கவின் கிருஷிகா தேர்வானார். இதனைத் தொடர்ந்து இஸ்ரோ நிர்வாகம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை மாணவி கவின் கிருஷிகாவுக்கு மே 14-ந் தேதி முதல் 26-ந் தேதி பார்வையிடவும், பயிற்சி பெறவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.