உள்ளூர் செய்திகள்

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்

Published On 2023-07-30 08:49 GMT   |   Update On 2023-07-30 08:49 GMT
  • காட்டுயானையை பட்டாசு வெடித்து விரட்டினர்.
  • பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது.

கூடலூர்

கூடலூர் அருகே மேல் கூடலூருக்குள் காட்டுயானை ஒன்று, நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு நுழைந்தது. உடனே அப்பகுதி மக்கள் காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் கெவிப்பாரா பகுதிக்கு காட்டுயானை இடம் பெயர்ந்தது.

இதுகுறித்து கூடலூர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வன ஊழியர்கள் விரைந்து வந்து கெவிப்பாரா பகுதியில் முகாமிட்ட காட்டுயானையை பட்டாசு வெடித்து விரட்டினர். இதனால் கோக்கால் மலைக்கு அந்த காட்டுயானை சென்றது.

இதற்கிடையில் திருவள்ளுவர் நகர் அருகே உள்ள அட்டி பகுதியில் 2 காட்டுயானைகள் புகுந்தது. மேலும் கூடலூர்-ஓவேலி சாலையில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட் பகுதிக்குள் சில காட்டுயானைகள் நுழைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News