- விவசாய கூலி தொழிலாளர்கள் வயலில் களை எடுத்தல் பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் கமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேதாரண்யம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கத்திரிப்புலம் பனையடி குத்தகையில் சரண்ராஜ் என்பவரின் மகன் நாகராஜன் சவுக்கு சாகுபடி செய்து வருகிறார்.
நேற்று மாலை இந்த சவுக்கு வயலில் களை எடுத்தல் பணி நடைபெற்றது. இதில் நாகக்குடையான் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது இடியுடன் மழை பெய்தது.
இதில் மின்னல் தாக்கியதில் நாகக் குடையான் ஜீவாநகர் பகுதியை சேர்ந்த குஞ்சையன் மனைவி கமலா (45), சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் நாகக்குடையான்பகுதியை சேர்ந்த ஆரவல்லி (60), ஜெயலட்சுமி(50), முத்தம்மாள்(50) ஆகிய 3 பேரும் அதிர்ச்சி அடைந்து மயங்கினர்.
இது குறித்து தகவலறிந்து வந்த கரியாபட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்து கமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேதாரண்யம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்னல் தாக்கி பெண் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது