உள்ளூர் செய்திகள்
கொடைக்கானல் மேல்மலையில் போதை காளான், கஞ்சா விற்ற வாலிபர் கைது
- கொடைக்கானல் மேல்மலையில் போதை காளான். கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதனை தொடர்ந்து போலீசார் அங்கு நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, போதைகாளான் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்
கொடைக்கானல்:
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் கும்பல் இயங்கி வந்தது. போலீசாரின் தீவிர நடவடிக்கையால் அது கட்டுபடுத்தப்பட்டது.
தற்போது மலை கிராமங்களில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் கொடைக்கானல் டி.எஸ்.பி. சீனிவாசன் அறிவுறுத்தலின்படி இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் பாஸ்டின், சப்-இன்ஸ்பெ க்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் மேல்மலை கிராமங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மன்னவனூர் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கரு ப்பையா (வயது 38) என்பவர் கைகாட்டி பகுதியில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனையில் ஈடுபட்டு இருந்தார். அவரை விரட்டி பிடித்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர்.