உள்ளூர் செய்திகள்
பெரியகுளம் அருகே வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது
- திரும்பி வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன.
- அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்ைத சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது42). சம்பவத்தன்று குடும்பத்துடன் தோட்டத்துக்கு சென்று விட்டார். மீண்டும் வீடு திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அருகில் கோடாரி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன.
அப்போது ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் உத்தமபாளையம் அருகே சுருளிபட்டியை சேர்ந்த ஆகாஷ் (வயது17) என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.