- உடலை நிர்வாகம் செய்வதே மனம் தான்.
- மனிதன் உணர்ச்சிகளை நீக்கி உணர்வுகளில் வாழ முயற்சிக்க வேண்டும்.
மனிதர்களுக்கு இரண்டு வகைகளில் நோய்கள் ஏற்படுகின்றன. உணவு, காற்று, நீர் இவைகளால் உடலுக்கு நோய் உருவாகும். கவலை, துக்கம், பயம், கோபம், பெருமை, பொறாமை, கர்வம் போன்றவை உணர்ச்சிகளாலும் நோய் உருவாகும்.
உடலை நிர்வாகம் செய்வதே மனம் தான். உங்கள் உடலை ஆட்டிப்படைக்கும் கவலை, துக்கம், பயம், கோபம், பெருமை போன்றவை உணர்ச்சிகளே.
உணர்வு பூர்வமாக வாழ்வது என்பது அமைதி, நிம்மதி, சாந்தி, சமாதானம் வாழ்வது. மனிதன் உணர்ச்சிகளை நீக்கி உணர்வுகளில் வாழ முயற்சிக்க வேண்டும்.
கவலை என்கிற உணர்ச்சி மண்ணீரல், வயிறு சம்பந்தப்பட்டது.
பசி என்பது வயிற்றை சார்ந்தது. ஒருவர் நல்ல பசியில் சாப்பிட தொடங்குகிறார். அப்பொழுது கவலையான ஒரு செய்தி வருகிறது. பசி காணாமல் போய் விடுகிறது. கவலை ஒன்று வந்தால் பசி உணர்வு இருக்காது. ஜீரண நீர் சுரக்காது. உங்கள் வயிறு, 'உன்னுடைய பிரச்சனை முடித்து விட்டு வா'என்று சொல்லும்.
கவலையோடு வேண்டா வெறுப்யோடு சாப்பிடும் உணவு சரியான முறையில் செரிப்பதில்லை. அந்த உணவில் இருந்து வரக்கூடிய சர்க்கரை சத்தானது கெட்ட சர்க்கரை மாறுகிறது. வயிற்றில் உப்புசம், தேவையில்லாத வாயுக்களும் உற்பத்தி ஆகின்றன.
துக்கம், அழுகை என்கிற உணர்ச்சி நுரையீரல், பெருங்குடல் சம்பந்தப்பட்டது.
துக்கமான செய்தி வருகிறது. அந்த செய்தி கேட்டு சிலர் அழுது விடுவார்கள். அந்த அழுகையின் காரணமாக மூச்சு மூட்டும். அதிக துக்கம் என்பது நுரையீரலையும், பெருங்குடலையும் பாதிக்கும். அதாவது காற்று மூலகத்தை பாதிக்கும்.
பயம் என்கிற உணர்ச்சி சிறுநீரகம், சிறுநீரக பை சம்பந்தப்பட்டது.
குழந்தைகளை பயமுறுத்தினால் அவர்கள் உடனே சிறுநீர் கழித்து விடுவதை காணலாம். பயம் என்கின்ற உணர்ச்சி நீர் மூலகத்தை பாதிக்கும். பயம் ஏற்படும் போது, உடலின் செயல் திறன் குறைகிறது. முகம் கருத்து விடுகிறது. பயத்தின் காரணமாக சிறுநீரக இயக்க சக்தி குறைந்து நோய்கள் உருவாக ஆரம்பிக்கிறது. ஒரு மனிதனை பயம் ஆட்கொள்ளும் போது, சாப்பிட்ட உணவு சரியான முறையில் செரிப்பதில்லை. அந்த உணவில் இருந்து வரக்கூடிய சத்தானது, கெட்ட சக்தியாக மாறுகிறது.
கோபம் என்கிற உணர்ச்சி கல்லீரல், பித்தப்பை சம்பந்தப்பட்டது.
கோபம் கொள்வது மிகவும் தீய பண்பாகும். உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும். ஒரு மனிதனின் கோபம் மற்றவர்களை பாதிக்கிறதோ இல்லையே நிச்சயமாக கோபம் கொண்ட மனிதனை பாதிக்கும்.
நீங்கள் கோபத்தில் இருக்கும் போது, 'என் இரத்த கொதிக்கிறது' என்று சொல்கிறீர்கள். என் வயிறு எரியும் படி செய்து விட்டான் என்று சொல்வோம். அதனால் கோபம் கொள்ளும் போது இரத்த கொதிப்பு அதிகரிக்கும். வயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளும் கெட்டுப் போய் விடும். நீங்கள் கோபம் அடையும் போது இரத்த நாளங்கள் கடினமாகி, முறுக்கேறுகின்றன. அதனால் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. பெரும்பாலானவர்களுக்கு பக்கவாதம் கோபத்தில் தான் ஏற்படுகிறது.
அதுமட்டுமல்ல தற்பெருமை, கர்வம், பொறாமை கொண்டாலும் உடல் நலம் பாதிக்கப்படும். இதனால் இதயம் மற்றும் சிறுகுடல் பலவீனப்படும்.
எனவே உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் எதிலும் நிதானத்துடன் இருந்தால் நிம்மதியாக மகிழ்வாக வாழலாம்.
-சிவசங்கர்