கதம்பம்

யாருக்கு மறுபிறப்பு?

Published On 2023-09-05 17:15 IST   |   Update On 2023-09-05 17:15:00 IST
  • இறை நிலையை உணராமல் அஞ்ஞானத்திலேயே இருந்தால் பிறவித் தொடர் தொடரும்.
  • இறை நிலையை ஆத்மார்த்தமாக உணர்ந்து விட்டால் இந்த பூமிக்கு வர வேண்டியதில்லை.

இறந்த பின் என்ன நடக்கும்? என்ன மாதிரியான வாழ்வு கிடைக்கும் பரமஹம்சரே?.

இறை நிலையை உணராமல் அஞ்ஞானத்திலேயே இருந்தால் பிறவித் தொடர் தொடரும்.

இறை நிலையை ஆத்மார்த்தமாக உணர்ந்து விட்டால் இந்த பூமிக்கு வர வேண்டியதில்லை. பிறவித் தொடர் அறுந்து விடும்.

உதாரணமாக, குயவன் பானைகளை செய்த பிறகு வெய்யிலில் காயவைப்பான். சில பானைகள் காய்ந்து விடும். சில பானைகள் காயாமல் இளக்கமாக இருக்கும். ஏதேனும் பசு அந்த பக்கமாக போகும் போது, காய வைக்கப்பட்ட பானைகள் மீது நடந்தால், சில பானைகள் உடைந்து விடும்.

குயவன் மீண்டும் அவற்றை உபயோகிக்க முற்படும்போது, உடைந்த நன்றாக காய்ந்த பானையின் துண்டுகளை தூக்கி போட்டு விடுவான். அதை மீண்டும் உபயோகிக்க முடியாது.

ஆனால் சரியாக காயாத இளக்கமான பானை துண்டுகளை பொறுக்கி எடுத்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து, இளக்கி, களிமண்ணாக மாற்றி மீண்டும் புது பானை செய்ய உபயோகப்படுத்துவான்.

அதே போல் தான் நன்றாக கடவுளை உணராதவர்கள், சரியாக வேகாத பானை போல. மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும்.

நன்றாக வேக வைக்கப்பட்ட விதை, மீண்டும் முளைக்காது. அதே போலத்தான், ஞானத் தீயால் தன்னை உணர்ந்தவன், இறை நிலையை உணர்ந்தவனுக்கு மீண்டும் பிறவி கிடையாது. அவன் விடுதலை அடைந்தவன்.

-ஆர்.எஸ். மனோகரன்

Tags:    

Similar News