இந்தியா
ஆந்திராவில் ரூ.374 கோடியில் 125 உயர அம்பேத்கர் சிலை 19-ந்தேதி திறப்பு
- அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிக்காக முதல்கட்டமாக ரூ.268 கோடி செலவில் பணிகள் நடைபெற்றன.
- அம்பேத்கரின் சிலைக்கு முன்புறம், பின்புறம் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் 125 அடி உயரமுள்ள அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு முன்புறம், பின்புறம் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆந்திர மாநில சமூக நலத்துறை மந்திரி மெருகு நாகார்ஜுனா கூறுகையில்:-
அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிக்காக முதல்கட்டமாக ரூ.268 கோடி செலவில் பணிகள் நடைபெற்றன.
2-வது கட்டமாக ரூ.106 கோடியில் அம்பேத்கர் சிலைக்கு வண்ணம் தீட்டுதல் அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இந்த சிலை வருகிற 19-ந்தேதி திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.