நெரிசலில் சிக்கி 18 பேர் பலி: ரெயில்வேயின் அலட்சியமே காரணம்-ராகுல்காந்தி
- காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
- ரெயில்வே அமைப்பின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.
புதுடெல்லி:
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். கும்பமேளாவுக்கு செல்ல மக்கள் திரண்டு இருந்ததால் இந்த நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசை பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் இறந்தனர் மற்றும் பலர் காயம் அடைந்தனர் என்ற செய்தி மிகவும் வருத்தமாகவும், துயரமாகவும் இருக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை ரெயில்வே அமைப்பின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது. மத்திய அரசின் உணர்வின்மையை வெளிப்படுத்துகிறது.
பிரக்யராஜால் நடை பெற்று வரும் கும்பமேளாவுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் செல்வதை கருத்தில் கொண்டு ரெயில் நிலையத்தில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ரெயில்வேயின் அலட்சியமே இதற்கு காரணம்.
தவறான நிர்வாகம், மற்றும் அலட்சியத்தில் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதை அரசும், நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ராகுல்காந்தி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.