செய்திகள்
பீகார்: ஜாமினில் விடுதலையான கொலைவழக்கு கைதி வீட்டுக்கு செல்லும் வழியில் சுட்டுக்கொலை
பீகார் மாநிலத்தில் கொலை வழக்கில் தொடர்புடையதாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ஜாமினில் விடுதலையாகி வீடு திரும்பியபோது மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாட்னா:
பீகார் மாநிலம், பாட்னா மாவட்டம், டோர்மா மாத்தியா கிராமத்தில் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் சுனில் யாதவ் என்பவரை கைதுசெய்த போலீசார், அவரை விசாரணை காவலில் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இதற்கிடையே, கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த அவரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நேற்று சிறையில் இருந்து ஜாமினில் விடுவிக்கப்பட்ட சுனில், நேற்று டோர்மா மாத்தியா கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சிலர் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சுனில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பிக்ரம் காவல்நிலைய போலீசார் கொலையாளிகளை தேடிவரும் நிலையில் சுனிலால் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கூலிப்படையை ஏவி இந்த படுகொலையை செய்திருக்கலாம் என உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர்.