செய்திகள்

ஜம்முவில் சர்வதேச எல்லை அருகே வங்காளதேச நாட்டவர் கைது

Published On 2016-07-23 21:38 IST   |   Update On 2016-07-23 21:38:00 IST
ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகில் சுற்றித்திரிந்த வங்காளதேச நாட்டு நபரை ராணுவம் கைது செய்துள்ளது.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்கானி வானியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதையடுத்து அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது. போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்குமிடையே மோதல் வெடித்தது. இதில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பெல்லட் குண்டுகளை பிரயோகம் செய்ததில் பலரது பார்வை பறிபோயுள்ளது.

வன்முறைச் சம்பவங்களால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக விலக்கப்பட்டது. எல்லைப்பகுதி தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகில் உள்ள ஆர்னியா பகுதியில் ஒரு நபர் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்துள்ளார். இதனைக் கவனித்த ராணுவ வீரர்கள், கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், ரெயில் மூலம் ஜம்முவை வந்தடைந்ததும் தெரியவந்தது. இதையடுது அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Similar News