செய்திகள்

மாயாவதி பற்றிய பேச்சு: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தயாசங்கர் சிங்

Published On 2016-09-06 07:01 IST   |   Update On 2016-09-06 07:01:00 IST
மாயாவதி பற்றி மாநில பா.ஜனதா துணைத்தலைவராக இருந்த தயாசங்கர் சிங் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
லக்னோ:

கடந்த ஜூலை மாதம், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியை பற்றி மாநில பா.ஜனதா துணைத்தலைவராக இருந்த தயாசங்கர் சிங் தரக்குறைவாக கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், அவரை கட்சியில் இருந்து பா.ஜனதா நீக்கியது. பிறகு கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார்.

இந்நிலையில், மாயாவதி பற்றி தயாசங்கர் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். மைன்புரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

மாயாவதி, பேராசை பிடித்த பெண்மணி. கபட வேடதாரி. அவரும், அவருடைய குடும்பத்தினரும் சந்தேகத்துக்கிடமான முறையில் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். சந்து பொந்துகளில், மோட்டார் சைக்கிள் வேகமாக சென்றால் அதை துரத்தும் நாய், மோட்டார் சைக்கிள் நின்று விட்டால், பின்வாங்கி விடும். அதுபோன்று இருக்கிறது அவரது செயல்பாடு.

இவ்வாறு தயாசங்கர் சிங் பேசினார்.

இதற்கிடையே, தான் அப்படி பேசவில்லை என்று அவர் மறுத்து விட்டார். தன்னைத்தான் நாய் என்று மாயாவதி கடந்த காலங்களில் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.

Similar News