செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய நிலைகளின்மீது துப்பாக்கிச் சூடு, மோர்ட்டார் குண்டுவீச்சு

Published On 2016-09-06 09:39 IST   |   Update On 2016-09-06 09:39:00 IST
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் காஷ்மீர் எல்லைப் பகுதியில் இன்று இந்திய நிலைகளின்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் முகாம்கள் மீது நேற்று பின்னிரவு வேளையில் இருந்து இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும், பூஞ்ச் எல்லைக்கோட்டின் அருகே உள்ள ஷாபூர் கான்டி பகுதியில் இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News