செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

Published On 2016-10-03 13:55 IST   |   Update On 2016-10-03 13:55:00 IST
காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் மாவட்டம் ஷாபூர் பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் மாவட்டம் ஷாபூர் பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.

இதற்கிடையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள உள்ள ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளை சேர்ந்த வீரர்கள் தங்கியிருக்கும் இரு முகாம்களின்மீது நேற்று நள்ளிரவு பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

சுதாரித்துக்கொண்ட இந்திய வீரர்களும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் வீரமரணம் அடைந்தார். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இந்த சம்பவத்திற்கு இந்த அத்துமீறல் நடைபெற்றது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.  இந்திய ராணுவம் தரப்பில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

Similar News