செய்திகள்

மும்பை: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து - இருவர் பலி

Published On 2016-10-18 04:10 GMT   |   Update On 2016-10-18 04:44 GMT
தெற்கு மும்பையில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் இன்றுகாலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
மும்பை:

தெற்கு மும்பையில் உள்ள கஃபே பரேட் பகுதியில் பல மாடிகளை கொண்ட ‘மேக்கர் சேம்பர்’ என்னும் அடுக்ககம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 20-வது மாடியில் ஒரு வீட்டின் அறையில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் திடீரென தீபிடித்தது.

மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கும், பக்கத்து வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்து பத்து வாகனங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்தனர்.



வெகுநேரம் போராடி தீயை அணைத்ததுடன் 20-வது மாடியில் சிக்கித்தவித்த 11 பேரை பத்திரமாக மீட்டனர். கருகிய நிலையில் இரு பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மீட்புப் படையினர், தொடர்ந்து அங்கு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News