செய்திகள்
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச் சூடு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவத்தின் இன்று காலையில் இருந்து அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநகர்:
முன்னதாக, நேற்று அதிகாலையில் இருந்தே ரஜோரி மாவட்டத்தின் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் படைகள் நேற்று முன்தினம் இரவில் இருந்து துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்திய வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர்.
நேற்று பின்னிரவு வரை நீடித்த இந்த மோதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களில் நான்குபேர் காயமடைந்தனர்.
அவர்களில் படுகாயமடைந்த ராய் சிங் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். சிகிச்சை பெற்றுவரும் மேலும் ஒரு வீரரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்துக்குட்பட்ட கிருஷ்ணா காட்டி எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள்மீது இன்று காலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி தந்து வருவதாகவும், இருதரப்பினருக்கு இடையிலான துப்பாக்கிச் சண்டையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஜம்முவில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.