செய்திகள்
மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்: சித்தராமையா
மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
ஹாசன்:
கர்நாடகம்-தமிழக எல்லையில் ஒகேனக்கல் அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான வரைவுதிட்டத்தை கர்நாடக அரசு தயாரித்து வந்தது. காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதை தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரு விதான சவுதாவில் முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடந்தது. இதில், மேகதாது அணை கட்டும் திட்டத்திற்காக ரூ.5,912 கோடி நிதி ஒதுக்கி மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.
இந்தநிலையில் ஹாசன் மாவட்டத்தில் அரிசிகெரேயில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், மேகதாது அணை திட்டம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
மேகதாது அணை திட்டமானது எதிர்காலத்தில் மாநிலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு அதை தடுக்க கொண்டுவரப்பட்ட திட்டமாகும். மேலும் இந்த திட்டத்தில் எந்த சட்டவிதி மீறல்களும் இல்லை. இந்த திட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்படும். இந்த திட்டம் நிறைவேறுமானால் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநில மக்களின் தண்ணீர் தேவைகள் பூர்த்தி ஆகும்.
மழைகாலத்தில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதை தடுத்து சேமித்து வைக்கும் வகையில் தான் இந்த மேகதாது அணை திட்டத்தை நாங்கள் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் விரைவில் அணை கட்டுவதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்படும்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் அரசியல் லாபத்திற்காக இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் எடியூரப்பா கூறியுள்ள லஞ்சப்புகார் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சித்தராமையா பதில் அளித்து கூறுகையில், ‘ நான் எனது பதவியை காப்பாற்றிக்கொள்ள ரூ.1,000 கோடியை காங்கிரஸ் மேலிடத்திற்கு லஞ்சமாக கொடுத்ததாகவும், அதற்கான குறிப்பேடு (டைரி) தன்னிடம் இருப்பதாகவும் எடியூரப்பா கூறி வருகிறார்.
அவ்வாறு அவர் டைரி வைத்திருந்தால் அந்த ஆதாரம் மூலம் என் மீது கோர்ட்டில் வழக்கு தொடரலாம். இதுபற்றி எடியூரப்பா தாராளமாக சட்டசபையில் விவாதிக்கலாம். நான் உரிய பதில் அளிக்க தயார்‘ என்றார்.