செய்திகள்

மின்னணு பணபரிவர்த்தனை எதிரொலி - நாடு முழுவதும் 358 ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன

Published On 2017-10-29 04:50 IST   |   Update On 2017-10-29 04:50:00 IST
500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்புக்கு பின்னர் மின்னணு பணபரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் எதிரொலியாக நாடு முழுவதும் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 358 ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளன.
புதுடெல்லி:

500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்புக்கு பின்னர் மின்னணு பணபரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் எதிரொலியாக நாடு முழுவதும் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 358 ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 0.16 சதவீதம் ஆகும். கடந்த 4 ஆண்டுகளாக ஆண்டுக்கு 16.4 சதவீதம் ஏ.டி.எம்.கள் அதிகரித்து வந்தன. கடந்த ஆண்டு 3.6 சதவீதம் மட்டுமே அதிகரித்தது. இப்போது தான் முதல்முறையாக ஏ.டி.எம். எண்ணிக்கை குறைந்துள்ளது.

சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் ஏ.டி.எம்.கள் அமைந்துள்ள இடத்துக்கு வாடகையாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஆகிறது. நாள் முழுவதும் 15 முதல் 18 டிகிரியில் வெப்பநிலை பராமரிப்பதால் மின்சார செலவு தான் மிகப்பெரிதாக இருக்கிறது. பாதுகாவலர் சம்பளம், பராமரிப்பு எல்லாம் சேர்த்தால் மாதம் ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. இதுவும் ஏ.டி.எம்.கள் மூடப்படுவதற்கு ஒரு காரணம் என்று வங்கிகள் தெரிவிக்கின்றன. 

Similar News