செய்திகள்

சிறையில் இருக்கும் லாலுவுடன் சரத்யாதவ் சந்திப்பு

Published On 2018-02-06 11:17 IST   |   Update On 2018-02-06 11:17:00 IST
ராஞ்சி சிறையில் இருக்கும் லாலுபிரசாத் யாதவை ஜக்கிய ஜனதா தள அதிருப்தி தலைவர் சரத்யாதவ் சந்தித்து பேசினார்.
பாட்னா:

கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். தண்டனை பெற்று அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ராஞ்சி சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவை ஜக்கிய ஜனதா தள அதிருப்தி தலைவர் சரத்யாதவ் சந்தித்து பேசினார்.

இதே போல ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா தலைவர் பாபுலால் மாரண்டி மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏ. பிரதீப் யாதவ் ஆகியோரும் சந்தித்து பேசினார்கள்.

இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கூறும் போது, ‘என் கஷ்டங்களை பற்றி கேட்டு அறிந்தனர். நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தோம்‘ என்றார்.

டெல்லி மேல்சபை எம்.பி. பதவியை பெறுவதற்காகவே லாலு பிரசாத் யாதவை சரத்யாதவ் சந்தித்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி செய்தி தொடர்பாளர் நீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவரான அவர் கூறியதாவது:-



கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக சரத்யாதவின் மேல்சபை உறுப்பினர் பதவி அவரிடம் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பறிக்கப்பட்டது. தற்போது விரக்தியில் இருக்கும் அவர் மேல்சபை எம்.பி. பதவி பெறும் நோக்கத்திலேயே சிறைக்கு சென்று லல்லுவை சந்தித்து உள்ளார்.

இவ்வாறு நீரஜ்குமார் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து சரத்யாதவ் கூறும்போது, எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்க்கும் வகையில் அவர்களை சந்திக்க நான் ராஞ்சிக்கு வந்துள்ளேன். அந்த வகையில் லாலு பிரசாத்தையும் சந்தித்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார். #tamilnews

Similar News