செய்திகள்

உத்தரகாண்டில் பொதுத் தேர்வு நேரத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை

Published On 2018-03-01 19:53 IST   |   Update On 2018-03-01 19:53:00 IST
உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுத் தேர்வு காரணமாக மார்ச் 5-ந் தேதி முதல் பொது நிகழ்ச்சிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிராண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் தொடங்க உள்ளது. பொதுத் தேர்வு வரவிருப்பதால் ஒலிபெருக்கிக்கு தடை விதிக்கமாறு குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் கடந்த 9-ந்தேதி தலைமை செயலருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஒலிபெருக்கியால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடும் என்றும் தேர்வு நேரத்தில் அவர்களின் கவனத்தை எளிதாக திசை திருப்ப முடியும் என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரசியல் கட்சி பேரணிகள், திருமண விழா மண்டபங்கள் மற்றும் கோவில்கள் தேர்வு நடைபெறும் இடங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

திருமண விழாக்களில் நடத்தும் இசை நிகழ்ச்சிகள் 45 டெசிபலுக்கு மேல் இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது குழந்தைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Similar News