செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் திடீர் பனிப்புயல்- 3 பேர் பலி

Published On 2019-03-12 13:49 IST   |   Update On 2019-03-12 13:49:00 IST
ஜம்மு காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #jksnowstorm
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த பனிப்பொழிவால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நேற்று கடும் உறைபனி படர்ந்து காணப்பட்டது.  

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் குப்புவாரா மாவட்டத்தில் இருந்து கர்னாஹ் பகுதிக்கு சிலர் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். பனியால் சூழப்பட்ட மலைப்பகுதியை கடந்து சாதனா மலைப்பகுதிக்கு வந்தடைந்தனர். அப்போது, 3 பேர்  மட்டும் மாயமானது தெரியவந்தது.

மற்றவர்கள் உடனடியாக ராணுவத்தினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

அப்பகுதியில் திங்கள் முதலே கடுமையான பனி நிலவி வருகிறது. இதன் காரணமாக திடீரென ஏற்பட்ட பனிப்புயலில் மூவரும் சிக்கி இறந்தது கண்டறியப்பட்டுள்ளது.  இவர்கள் மூவரும் கர்னாஹ் பகுதியைச் சேர்ந்த தாகிர் கோஜா, காலிக் ஷேக், ஃபரேத் அகமது என்பது தெரிய வந்துள்ளது. #jksnowstorm
Tags:    

Similar News