பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: சஞ்சய் ராவத் வலியுறுத்தல்
- நூற்றாண்டு விழா தொடங்குவதற்கு முன் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது அவசியம்.
- பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கினால், அது வீர சாவர்க்கருக்கு மரியாதையாக இருக்கும்.
சிவசேனா கட்சி நிறுவனர் மறைந்த பால் தாக்கரேவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சிவசேனா கட்சி (UBT) தலைவர் சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார். பால் தாக்கரேயின் 99-வது பிறந்த தின விழாவில் இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு குடிமக்களுக்கான நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை, தகுதியற்ற சிலருக்கு வழங்கியுள்ளது. ஆனால், நாட்டில் இந்துத்துவாவின் விதைகளை உண்மையிலேயே விதைத்தவருக்கு பாரத ரத்னாவும் வழங்கப்பட வேண்டும்.
அவருக்கு ஏன் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை? விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். இது உத்தவ் தாக்கரே சிவசேனாவின் கோரிக்கை.
நூற்றாண்டு விழா தொடங்குவதற்கு முன் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது அவசியம். உங்களால் வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியாது. பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கினால், அது வீர சாவர்க்கருக்கு மரியாதையாக இருக்கும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்து்ளளார்.