இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய பாதுகாப்பை திரும்ப பெற்றது பஞ்சாப் போலீஸ்

Published On 2025-01-23 21:59 IST   |   Update On 2025-01-23 21:59:00 IST
  • பஞ்சாப் போலீஸ் கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தது.
  • தேர்தல் ஆணையத்திடம் டெல்லி போலீசார் புகார் அளித்ததால், தற்போது பாதுகாப்பை திரும்ப பெற்றுள்ளது.

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார்.

கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் மாநில போலீசார் வழங்கும் பாதுகாப்பை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் டெல்லி போலீசார் புகார் அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு வழங்கி வரும் பாதுகாப்பை பஞ்சாப் மாநில போலீஸ் திரும்ப பெற்றுள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் மாநில டிஜிபி கவுரவ் யாதவ் கூறுகையில் "பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் வருவதாக அவ்வப்போது எங்களுக்கு தகவல் வருகின்றன. இது தொடர்பாக நாங்கள் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுடன் பகிர்ந்து கொள்கிறோம். டெல்லி போலீஸ் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இன்று, கெஜ்ரிவாலுக்கு வழங்கி வந்த பஞ்சாப் மாநில போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்றுள்ளோம்.

எங்களுடைய கவலையை அவர்களிடம் தெரிவித்துள்ளோம். அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம். டெல்லி போலீசுடன் எங்களுடைய தகவலை பகிர்ந்து கொள்வோம்" என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு Z-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. விமானி, பாதுகாப்பு அணிகள், நெருங்கிய பாதுகாப்பு ஸ்டாஃப் உள்பட 63 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் மத்திய ஆயுத போலீஸ் படையினர் 15 பேரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News