குடியரசு தினவிழாவில் பங்கேற்க பைகா பழங்குடியினருக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி
- சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா பகுதியில் பைகா பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
- இவர்களுக்கு குடியரசு தின விழாவில் பங்கேற்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா பகுதியில் பைகா பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டு கடந்துள்ள நிலையில், பைகா பழங்குடியின மக்கள் தங்களது கிராமங்களில் இன்றுவரை அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக சத்தீஸ்கரில் உள்ள பைகா பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் பைகா பழங்குடியின குடும்பத்தினர், ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் உணவருந்த உள்ளனர். அதன்பின் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம், பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி இல்லம் உள்ளிட்ட இடங்களை அவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.