செய்திகள்
நீரா பானம்

மதுக்கடைகள் மூடல் எதிரொலி- நீரா பானம் கடும் விலை உயர்வு

Published On 2020-04-21 08:45 IST   |   Update On 2020-04-21 08:45:00 IST
ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் நீராபானத்திற்கும் கடும் கிராக்கி ஏற்பட்டு அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை ஆகிறது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் தென்னை மரத்தில் இருந்த எடுக்கப்படும் நீராபானத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நீரா பானம் ஒரு லிட்டர் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மதுபானம் கிடைக்காமல் மதுபிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக கள்ளச்சாராய விற்பனையும் அதிகரித்து வருகிறது.

அதே வேளையில் நீராபானத்திற்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் நீரா பானம் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை ஆகிறது. மதுக்கடைகள் திறந்த பிறகே நீரா பானம் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Similar News