செய்திகள்
ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்

கொரோனாவால் இறக்கும் சுகாதார பணியாளர்கள் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - நவீன் பட்நாயக்

Published On 2020-04-21 16:18 IST   |   Update On 2020-04-21 16:18:00 IST
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இறக்கும் டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இறக்கும் டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடும் சுகாதார பணியாளர்கள் மற்றும் உதவியாக உள்ளவர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும்.

அவர்களது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். அவர்களின் ஈடு இணையில்லாத பணியை பாராட்டி விருது வழங்கப்படும்.

மேலும், கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்கள் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Similar News