செய்திகள்
பெட்டில் கால்கள் கட்டப்பட்டிருக்கும் கொடூரம்

சிகிச்சை கட்டணம் ரூ. 14 ஆயிரம் கட்டாததால் முதியவர் காலை பெட்டில் கட்டிய மருத்துவனைக்கு சீல் வைப்பு

Published On 2020-06-08 21:59 IST   |   Update On 2020-06-08 21:59:00 IST
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவனை ஒன்று, சிகிச்சை பணம் கட்டாததால் வயதான முதியவர் காலை பெட்டில் கட்டிய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷஜாபூரில் தனியார் மருத்துவனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் 80 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்து இறுதியாக 14 ஆயிரம் ரூபாய்க்கான கட்டண ரசீது கொடுத்துள்ளனர்.

கட்டணத்தை முதியவரால் கட்ட முடியவில்லை. இதனால் அந்த முதியவரின் காலை பெட்டில் உள்ள கம்பியில் கட்டி வைத்துள்ளனர். இந்தப்படம் கடந்த வாரம் வெளியாகியது. முதியவரை கட்டிப்போட்ட படம் வெளியானதை தொடர்ந்து விமர்சனம் எழும்பியது.

அம்மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான், மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிலையில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Similar News