செய்திகள்
எல்லை பாதுகாப்பு படை

எல்லை பாதுகாப்பு படையில் மேலும் ஒரு வீரர் கொரோனாவால் உயிரிழப்பு

Published On 2020-06-11 01:10 GMT   |   Update On 2020-06-11 01:10 GMT
எல்லை பாதுகாப்பு படையில் மேலும் ஒரு வீரர் கொரோனாவால் உயிரிழந்தார்.
புதுடெல்லி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதுகாப்பு மற்றும் சுகாதார பணியில் ஈடுபட்டுள்ளவர்களையும் குறிவைத்து பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

அந்த வகையில் டெல்லி மாநில போலீசாருடன் பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் வினோத் குமார் பிரசாத்துக்கு கடந்த 5-ம் தேதி திடீரென காய்ச்சல், இருமல் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறுநாளில் அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

இதனால் அவர் அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வினோத் குமார் பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். இது எல்லை பாதுகாப்பு படையில் ஏற்பட்ட 3-வது உயிரிழப்பு ஆகும்.

Similar News