செய்திகள்
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடக மாநில கொரோனா அப்டேட்....
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,603 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,198 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,603 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,23,723 ஆக அதிகரித்துள்ளது. இன்று 198 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 9,448 ஆக அதிகரித்துள்ளது.
மும்பையில் இன்று 1,347 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 87,856 ஆக அதிகரித்துள்ளது. இதில் 23,543 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 62 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 5,064 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் இன்று புதிதாக 301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2605 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3561 பேர் குணமடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் 2,062 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 28,877 அதிகரித்துள்ளது. 11,876 பேர் குணமடைந்துள்ள நிலையில், 470 பேர் உயிரிழந்துள்ளனர்.