இன்ஸ்டா பிரபலம் சிம்ரன் சிங் தற்கொலை
- இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.
- ரசிகர்கள் சிம்ரன் சிங்சை ஜம்முவின் இதயத்துடிப்பு என அழைத்து வந்தனர்.
சண்டிகர்:
ஜம்மு காஷ்மீரின் ப்ரீலான்சர் ரேடியோ ஜாக்கியும், இன்ஸ்டாகிராமில் பிரபலமானவருமான சிம்ரன் சிங், அரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள அபார்ட்மென்டில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார்.
இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்துள்ளனர். இவர் கடைசியாக டிசம்பர் 13-ம் தேதி இன்ஸ்டாவில் ரீல் வெளியிட்டுள்ளா.
25 வயதான சிம்ரன் சிங் குருகுராமில் வாடகைக்கு வசித்து வந்த செக்டார் 47 அபார்ட்மென்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருடன் தங்கியிருந்த நண்பர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த போலீசார் சிம்ரன் சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்கொலை தொடர்பாக எந்தக் கடிதமும் கிடைக்கவில்லை. அவருடைய குடும்பத்தினர் எந்தப் புகாரும் அளிக்கவில்லை.
விசாரணையில், சில நேரங்களில் சிம்ரன் சிங் அப்செட்டாக இருந்தார். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர்.
ரசிகர்கள் சிம்ரன் சிங்சை ஜம்முவின் இதயத்துடிப்பு என அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.