செய்திகள்
தேநீர் விருந்து அளித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து

Published On 2021-08-08 05:39 IST   |   Update On 2021-08-08 05:39:00 IST
ஜனாதிபதி மாளிகையில் மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளித்தார்.
புதுடெல்லி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு  தேநீா் விருந்து அளித்தாா். ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரும் கலந்து கொண்டனா்.

மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகளை உற்சாகமாக வரவேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவா்களுக்கு தேநீா் விருந்து அளித்தாா்.

இதில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மாளிகை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Similar News