செய்திகள்
பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்

பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்- பயணிகளை மயிரிழையில் காப்பாற்றிய டிரைவர்

Published On 2021-08-08 08:21 IST   |   Update On 2021-08-08 11:47:00 IST
பள்ளத்தாக்கில் பஸ் பாதி கவிழ்ந்த நிலையில் பஸ்சின் டிரைவர் மிக நேர்த்தியாக, துரித கதியில் செயல்பட்டு விபத்தைத் தவிர்த்து பயணிகளை காப்பாற்றினார்.
சிம்லா:

இமாசலபிரதேச மாநிலம், சிர்மாவுர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு தனியார் பஸ் 22 பயணிகளுடன் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை எண்.707-ல் சென்று கொண்டிருந்தது.

ஷில்லாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அதன் டயர்களில் ஒன்று வெடித்து தறிகெட்டு ஓடி சாலைத்தடுப்புகளை இடித்துத்தள்ளிவிட்டு பள்ளத்தாக்கி்ல் கவிழும் நிலை உருவானது. பாதி கவிழ்ந்த நிலையில், பயணிகள் அச்சத்தில் அலறினர்.

ஆனால் பஸ்சின் டிரைவர் மிக நேர்த்தியாக, துரித கதியில் செயல்பட்டு விபத்தைத் தவிர்த்து பயணிகளை மயிரிழையில் காப்பாற்றினார்.

மீட்பு படையினர் விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். திறமையாக செயல்பட்டு சாதித்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்தன.


Similar News