இந்தியா
உ.பி 5-ம் கட்ட தேர்தல் நிறைவு- 5 மணி நிலவரப்படி 53.98 சதவீத வாக்குகள் பதிவு
உத்தர பிரதேசத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல வாக்காளர்கள் வருகை அதிகரித்தது. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 21.39 சதவீதம், மதியம் 1 மணி நிலவரப்படி 34.83 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.28 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
உ.பியில் தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5 மணி நிலவரப்படி 53.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், 6-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் மார்ச் 3-ம் தேதி அன்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 7-ம் தேதி அன்றும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு