7 கண்டங்களின் உயரிய சிகரங்களில் ஏறி உலக சாதனை படைத்த 12 ஆம் வகுப்பு மாணவி
- 7 வதாக அண்டார்டிக்காவில் செயின்ட். வின்சென்ட் மலை சிகரத்தை எட்டியுள்ளார்
- காம்யா கார்த்திகேயன் மற்றும் அவரது தந்தைக்கு இந்தியக் கடற்படை வாழ்த்து தெரிவித்துள்ளது.
குறைந்த வயதில் உலகின் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான சிகரங்களில் ஏறிய பெண் என்ற சாதனையை மும்பையைச் சேர்ந்த17 வயது சிறுமி காமியா கார்த்திகேயன் படைத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள நேவி சில்ட்ரன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் காம்யா கார்த்திகேயன்,
ஆப்பிரிக்காவின் மவுண்ட் கிளிமஞ்சாரோ, ஐரோப்பாவின் மவுண்ட் எல்ப்ரஸ், ஆஸ்திரேலியாவின் மவுண்ட் கோஸ்கியுஸ்கோ, தென் அமெரிக்காவின் மவுண்ட் அகோன்காகுவா, வட அமெரிக்காவின் மவுண்ட் டெனாலி, மற்றும் ஆசியாவின் எவரெஸ்ட் சிகரம் ஆகியவற்றின் சிகரங்களை எட்டினார்.
இந்நிலையில் தற்போது 7 வதாக அண்டார்டிக்காவில் செயின்ட். வின்சென்ட் மலை சிகரத்தையும் எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
டிசம்பர் 24 அன்று சிலி நேரப்படி 1,720 மணி நேரத்தில் தனது தந்தை சிடிஆர்எஸ். கார்த்திகேயனுடன் அண்டார்டிக்காவில் உள்ள வின்சென்ட் மலை உச்சியை அடைந்தார் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த முக்கியமான மைல்கல் சாதனையை படைத்த காம்யா கார்த்திகேயன் மற்றும் அவரது தந்தைக்கு இந்தியக் கடற்படை வாழ்த்து தெரிவித்துள்ளது.