இந்தியா

உத்தரகாண்டில் கடும் பனிச்சரிவு: 47 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு- மீட்புப்பணி தீவிரம்

Published On 2025-02-28 14:31 IST   |   Update On 2025-02-28 14:33:00 IST
  • சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது பனிச்சரிவு.
  • 10 தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ராணுவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மணா என்ற கிராமத்தில் இன்று காலை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 47 பேர் குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மணா அருகில் உள்ள ராணுவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மணா கிராமம் இந்தியா- திபெத் எல்லையில் உள்ளது.

பத்ரிநாத் தாமில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென பனிப்பாறைகள் சரிந்து அவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநில பேரிடர் மீட்புக்குழு, தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாவட்ட நிர்வாகம், இந்தோ-திபெத் எல்லை போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

இந்திய வானிலை மையம் உத்தரகாண்ட் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News